×

திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சிறப்பு வார்டு

திருச்செங்கோடு, பிப்.4: திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்புக்கு சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இதை நாமக்கல் மாவட்ட சுகாதார துறை இணை இயக்குநர் ஆய்வு செய்தார். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக, திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு துவங்கப்பட்டுள்ளது. இதனை நாமக்கல் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் சாந்தி ஆய்வு செய்தார். பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:  நாமக்கல் மாவட்டத்தில் யாரும் கொரோனா வைரசால் பாதிக்கப்படவில்லை. தமிழ்நாட்டில் இதுவரை 7,842 பேர் ஆய்வு செய்யப்பட்டு அவர்களில் 1,150 பேர் கண்காணிப்பில் உள்ளனர். யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் முறைகள் குறித்து துண்டுபிரசுரம் வெளியிட்டுள்ளோம். இதனை பள்ளி, கல்லூரி மற்றும் மக்கள் கூடும் இடங்களில் விநியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இருமல், தும்மல் வரும்போது கைக்குட்டை கொண்டு மூடுவதால், கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம். முறைப்படி கைகளை கழுவினாலே, எவ்விதமான வைரஸ் பாதிப்பும் ஏற்படாது. இவ்வாறு அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து, திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது. கைகளை கழுவும் முறை பற்றி, செவிலியர்கள் மாணவர்களுக்கு விளக்கினர். இந்நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியர் செந்தில்குமார் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Tiruchengode Government Hospital ,
× RELATED புதிய கட்டிடங்கள் கட்டுமான பணியை எம்எல்ஏ ஆய்வு